ATM எந்திரத்தை காரில் கயிறு கட்டி இழுத்த கொள்ளை கும்பல்..மும்பையில் அதிர்ச்சி!
A gang of robbers tied a rope to an ATM machine and pulled it away in a car Shock in Mumbai
மும்பையில் ஏ.டி.எம். எந்திரத்தை காரில் கயிறு கட்டி இழுத்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை போலீஸ் வலை வீசி தேடிவருகின்றனர்.
மராட்டிய மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகர் ஷாநூர்வாடி பகுதியில் அமைத்துள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை . அந்த வாங்கியின் ஏ.டி.எம். மையம் அதன் அருகில்உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை வாடிக்கையாளர் ஒருவர் அங்கு பணம் எடுக்கச்சென்றபோது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் வங்கிக்கு தகவல் கொடுத்ததையடுத்து வங்கி கிளை மேலாளர் ஜவகர்நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை கும்பல் காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து கொள்ளையடிக்க முயன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் காரில் ஏ.டி.எம். மையத்துக்கு வந்த 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தில் கயிறை கட்டி கார் மூலம் இழுத்துள்ளனர். ஆனால் அது கை கூடாததால் ஏ.டி.எம். எந்திரத்தை அப்படியே தூக்கி சென்றுவிடலாம் என்று நினைத்த அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து அந்த கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்ததும் அதும் பலன் அளிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கொள்ளை கும்பல் ஏ.டி.எம். மைய கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை காரில் கட்டி பெயர்த்து கொள்ளையடிக்க முயன்ற கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.
English Summary
A gang of robbers tied a rope to an ATM machine and pulled it away in a car Shock in Mumbai