கோவை, திருப்பூரில் கள ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின் - எப்போது தெரியுமா?
chief minister mk stalin going to coimbatore and tirupur
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வரும் 11, 12 உள்ளிட்ட தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின் கோவையில் புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

அங்கிருந்து திருப்பூர் சென்று வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 12-ந்தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்.
கள ஆய்வு மேற்கொள்ளும் இந்த 2 நாட்கள் கோவையில், திருப்பூர் மாவட்டங்களில் ரோடு ஷோ மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். கடந்த ஜூலை 22, 23-ந்தேதி கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கள ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
chief minister mk stalin going to coimbatore and tirupur