திருமண வீடு துக்க வீடான சம்பவம்...! முதலிரவில் விபரீத முடிவை எடுத்த மணப்பெண்...!
incident where wedding house became house mourning bride made strange decision first night
ஆந்திரபிரதேசம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் சோமந்தூர்பள்ளியை சேர்ந்த 22 வயதான ஹர்ஷிதா என்பவருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 'நாகேந்திரா' என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் நேற்று முன்தினம் திருமணம் நடைபெயற்றது.இந்த கோலாகலமான திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், திருமண வீட்டார் தடபுடலாக விருந்தளித்து மகிழ்ந்தனர்.இதில் சோமந்தூர் பள்ளியில் உள்ள மணமகள் வீட்டில் வைத்து புதுமணத்தம்பதியின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்திருந்தனர். இந்நிலையில்,வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் சென்ற மணப்பெண் கதவை சாத்திக்கொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படாததால்,கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய மணமகளை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹர்ஷிதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறினர்.மேலும், மணப்பெண்ணின் உடலை பார்த்த பெற்றோரும், உறவினர்களும் இதனைத் தங்கி கொள்ள முடியாமல் கதறி அழுதனர். சந்தோசத்தில் இருந்த திருமண வீடு சில மணி நேரத்திலேயே துக்க வீடானது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், இளம்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
English Summary
incident where wedding house became house mourning bride made strange decision first night