இலங்கையில் பெய்த கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு - Seithipunal
Seithipunal


இலங்கையில் பெய்த கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை மற்றும் சீரற்ற வானிலையால் இலங்கையின் மேற்கு, தென் மாகாணங்கள் மற்றும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தொடரும் கனமழையால் இலங்கையின் பெரும் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் 11000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 2000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மழையால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்த நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இலங்கையின் வடமேற்கு, வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை தற்போது இயற்கை சீற்றத்தாலும் பாதிப்பை சந்தித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain in srilanka


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->