H1-B விசா கட்டணம் ரூ.88 லட்சமா...? - டிரம்பின் உத்தரவால் உலக மக்கள் பரபரப்பு - Seithipunal
Seithipunal


அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், தொடர் அதிரடி நடவடிக்கைகளால் உலக கவனத்தை ஈர்த்துள்ளார். சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை எடுத்த அவர், இப்போது அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களையே குறிவைத்துள்ளார்.

இதில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை “வெளிநாட்டினர் பறித்து விடுகின்றனர்” என்ற குற்றச்சாட்டின் பேரில், H1-B விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் கையெழுத்திட்ட இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதனால், வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் பெரும் சுமையை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் வெள்ளை மாளிகை விளக்கமளித்ததாவது,"புதிய விசா விண்ணப்பதாரர்களுக்கே இந்த கட்டணம் பொருந்தும்; ஏற்கனவே விசா பெற்றவர்கள் அல்லது புதுப்பிப்பவர்கள் இதில் சேரமாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளது.

இதனால், அமெரிக்காவில் ஏற்கனவே பணிபுரியும் பல இந்தியர்களும் வெளிநாட்டு தொழிலாளர்களும் நிம்மதி மூச்சு விட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

H1 B visa fee Rs 88 lakhs Trumps order creates stir among people world


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->