4 பேருக்கு FIR! கொதிக்கும் எண்ணெயில் கையை வைக்கச் செய்த உறவினர்கள்...! -குஜராத்தில் பெண் மீது கொடூரம்! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம், விஜாப்பூர் தாலுகாவின் கெரிடா கிராமத்தில் 30 வயது பெண்ணை, அவரது கணவரின் உறவினர்கள் அதிர்ச்சிகரமாக கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவரின் சகோதரி ஜமுனா தாகூருக்கு, அந்த பெண் உண்மையில் மனைவியா என்ற சந்தேகம் எழுந்ததால், தன் கணவர் மனுபாய் தாகூரும் இருவர் சேர்ந்து, அந்த பெண்ணை அறைக்குள் அழைத்துச் சென்றனர்.

அங்கு, “நீ உண்மையான மனைவி என்றால், இந்த கொதிக்கும் எண்ணெயில் கையை வைய்; உண்மையானவள் என்றால் எதுவும் ஆகாது” என்று வற்புறுத்தினர்.இந்த அதிர்ச்சியில் சிக்கிய அந்த பெண், விரல்களை கொதிக்கும் எண்ணெயில் விட்டதால் கடும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொடூரச் சம்பவத்திற்கு காரணமான ஜமுனா தாகூர் உள்ளிட்ட நால்வரும் தப்பிச் சென்ற நிலையில், அவர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதாக காவல் துணை சூப்பிரண்டு தினேஷ் சின்ஹ சவுகான் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த சம்பவத்துக்கான வீடியோ நேற்று முன்தினம் வைரலாகி, பொதுமக்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

FIR against 4 people Relatives who forced her to put her hand boiling oil Cruelty woman Gujarat


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->