தரமற்ற கண் சொட்டு மருந்து... 30 பேருக்கு நேர்ந்த கதி... இந்திய நிறுவனத்தின் மீது இலங்கை அரசு குற்றச்சாட்டு...!
Gujarat firm gets notice as poor quality eye drops infect 30 srilankans
கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கு இந்திய அரசு மருத்துவ உதவிகளையும், தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி வருகிறது. இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனம் இலங்கைக்கு விநியோகித்த கண் சொட்டு மருந்துகளால் 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசு புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கிய நோட்டீஸில், குஜராத் நிறுவனம் அளித்த சொட்டு மருந்தில் பர்கோல்டேரியா செபாசியா என்ற பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே கண் தொற்று மற்றும் நீர் வடிதல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், கண் சொட்டு மருந்தை திரும்ப பெறவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு மையம் இந்தியானா நிறுவனத்தில் கண் சொட்டு மருந்து உற்பத்தியை நிறுத்துமாறு உத்திரவிட்டுள்ளது. மேலும் மருந்துகளின் தரம் குறித்து ஆய்வு மற்றும் விசாரணையை கட்டுப்பாட்டு மையம் தொடங்கியுள்ளது.
English Summary
Gujarat firm gets notice as poor quality eye drops infect 30 srilankans