தாத்தா-பாட்டி உள்பட 3 பேரை கொலை செய்த இந்திய மாணவர்! துப்புதுலக்கும் போலீசார்! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, நியூஜெர்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ஒரு வீட்டிற்குள் 3 பேர் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்தனர். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் குஜராத்தை சேர்ந்த திலீப் குமார் (வயது 72).

 

இவரது மனைவி பிந்து மகன் யஷ்குமார் (வயது 38) என்பதும் இவர்களை உறவினர் ஓம் பிரம்மபட் (வயது 33) என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததும் தெரியவந்தது. 

இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். 2 மாதங்களுக்கு முன்பு நியூஜெர்சிக்கு குடி பெயர்ந்து தாத்தா-பாட்டியுடன் ஓம் பிரம்மபெட் வசித்து வந்தார். 

இந்நிலையில் அவர் எதற்காக 3 பேரையும் கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் பயன்படுத்திய துப்பாக்கி ஆன்லைன் மூலம் வாங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

grandparents including 3 people killed Indian student


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->