பனிப்பாறை சரிந்து விபத்து.. 6 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஆல்ப்ஸ் மலைத்தொடரும் ஒன்று. இந்த மலைத்தொடர் இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது.

இந்த மலைத்தொடரில் சுற்றுலாப் பயணிகள் மலையேறுதல், பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் பலரும் ஈடுபடுவார்கள். இத்தாலி நாட்டில் வழியாக செல்லும் இந்த மழைதொடரில், சுமார் 3300 மீட்டர் உயரத்தில் மர்மலாடா என்ற சிகரம் உள்ளது.

 புன்டா ரோக்கா என்ற பகுதியில் வழியாக இந்த சிகரத்தை அடையலாம். இந்த பகுதியில் பலர் மலையேற்றதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் புன்டா ரோக்கப் பகுதிக்கு அருகில் பனிப்பாறை சரிந்து விழுந்தது. அப்போது மலையேற்றதில் ஈடுபட்டிருந்தவர்கள் சிலர் சிக்கி அடித்து செல்லப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்து மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் பெல்லுனோ, ட்ரெவிசா, டேரென்டோ உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Glacier collapse accident 6 people lost their lives


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->