நட்சத்திர விடுதியில் கவர்ச்சி நடனமாடிய இளம்பெண்... கம்பியின் உச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


பெரும்பாலும் இரவு நேரத்தில் நடைபெறும் நைட் கிளிப்பில் பெண்கள் கவர்ச்சி உடை அணிந்துகொண்டு வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் வளைந்து நெளிந்து நடனமாடுவது வழக்கம். அந்த வகையில், ஒரு நைட் கிளுப்பில் ஏற்ப்பட்ட விபரீதம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரம் ஒன்று உள்ளது. அந்த நகரத்தில் நட்சத்திர விடுதி அமைந்திருக்கிறது. இந்த விடுதியில் நைட் க்ளப் நடைபெற்றது, அதில் இரண்டு இளம்பெண்கள் கவர்ச்சி நடனமாடியுள்ளனர். அப்போது 15 அடி உயர கம்பியின் உச்சியில் ஆடிக்கொண்டிருந்த ஜெனியா என்ற பெண் திடீரென அந்தரத்தில் இருந்து 'பொத்தென' விழுந்துள்ளார்.

இதில் காயமடைந்த அந்த பெண், மீண்டும் எழுந்து நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, ஜெனியாவிற்கு பலரும் போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் நலம் விசாரித்து வருகின்றனர். மேலும் ஜெனியா தற்காலிக ஊழியர் என்பதால் காயத்துக்கு இழப்பீடு ஏதும் தரமுடியாது என்று அந்த விடுதி நிர்வாகம் மறுத்ததாக தெரியவந்துள்ளது. 

இந்த விபத்தில் எனது தாடையில் காயம் ஏற்பட்டது. பற்கள் சிலவும் உடைந்து விட்டன, கணுக்காலில் சின்ன காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இதற்கு சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது எல்லோருடைய மெசேஜ்களையும் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது’ என அந்த பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girl fell down on night club party


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->