"கர்மா ஒரு வட்டம்!": எப்ஸ்டீன் விவகாரத்தில் பில் கேட்ஸை வம்புக்கு இழுத்த எலான் மஸ்க்!
Gates Admission and Musks Karma Comment Spark Global Buzz
அமெரிக்கத் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீனின் சர்ச்சைக்குரிய கோப்புகள் வெளியாகி உலகையே உலுக்கி வரும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்ச்சையின் பின்னணி:
சமீபத்தில் வெளியான 'எப்ஸ்டீன் கோப்புகளில்' பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டதுடன், எப்ஸ்டீனுடன் நட்பு கொண்டது தான் செய்த மிகப்பெரிய தவறு என மன்னிப்பும் கோரியுள்ளார்.
மஸ்க்கின் பதிலடி:
இந்தச் செய்தியை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த பயனர் ஒருவருக்குப் பதிலளித்த எலான் மஸ்க், "கர்மா உண்மையானது" (Karma is real) எனப் பதிவிட்டுள்ளார்.
ஏன் இந்த வம்பு?
கடந்த எட்டு ஆண்டுகளாக டெஸ்லா நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடையும் எனப் பில் கேட்ஸ் சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ₹4,150 கோடி) தொகையை 'ஷார்ட் செல்லிங்' (Short Selling) முறையில் பந்தயம் கட்டியிருந்தார். மஸ்க் இதைக் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது பில் கேட்ஸ் சிக்கலில் இருப்பதை 'கர்மா' எனச் சாடியுள்ளார்.
தற்போதைய நிலை:
பணக்காரர் பட்டியல்: எலான் மஸ்க் முதலிடத்தில் நீடிக்க, பில் கேட்ஸ் முதல் 10 இடங்களுக்குள் கூட இல்லை.
ட்விஸ்ட்: இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் எலான் மஸ்க்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷார்ட் செல்லிங் (Short Selling): ஒரு நிறுவனத்தின் பங்கு விலை எதிர்காலத்தில் குறையும் என்று கணித்து, கடனாகப் பங்குகளைப் பெற்று விற்றுவிட்டு, விலை குறைந்த பின் மீண்டும் வாங்கி லாபம் ஈட்டும் ஒரு பங்குச்சந்தை உத்தியாகும்.
English Summary
Gates Admission and Musks Karma Comment Spark Global Buzz