சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் சிக்கி 14 பேர் பலி - 5 பேர் மாயம்.!!
fourteen peoples died and five peoples missing in china for earth quake
சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் சிக்கி 14 பேர் பலி - 5 பேர் மாயம்.!!
சீன நாட்டில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகிலுள்ள ஜின்கோஹேவில் அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று காலை 6 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி பதினான்கு பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும். இந்தப் பகுதி தொலைதூர மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாகும்.
அதனால் இந்த பகுதி, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் தொடர்ந்து பேரழிவுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
fourteen peoples died and five peoples missing in china for earth quake