அரசு நிதி முறைகேடு வழக்கு: கைதுசெய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கை..! - Seithipunal
Seithipunal


அரசு நிதி முறைகேடு வழக்கில், இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமராக பதவி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தற்போதைய அநுர குமரா திஸாநாயக்க அரசாங்கத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க (76), அந்நாட்டில் பல ஆண்டுகாலம் அரசியலில் இருக்கிறார். இலங்கை பொருளாதார ரீதியாக திவால் நிலையை அடைந்தபோது, ஜனாதிபதியாக பொறுப்பேற்று மீண்டும் நிலைமையை சீர்படுத்தியவர்.

இவர்  ஜனாதிபதியாக இருந்தபோது 2023-இல் அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்க, லண்டன் பல்கலையில் பட்டம் பெற்றார். இதையடுத்து, ரணில், அவரது மனைவி உள்ளிட்ட 10 பேர் லண்டன் பயணம் மேற்கொண்டனர். இப்பயணத்திற்காக அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதன் காரணமாக, ரணில் விக்கிரமசிங்க நேற்று குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஐ.சி.யு. வில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை அதிபர்கள் எவரும் கைது செய்யப்பட்டதில்லை. தற்போது தான் முதல் முறையாக முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ரணிலை அரசியலில் இருந்து வெளியேற்றும் நோக்கத்துடன் இந்த செயலில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Sri Lankan President Ranil Wickremesinghe Admitted to Emergency Department


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->