நேபாளத்தில் உச்சக்கட்ட பதற்றம்: நேபாள முன்னாள் பிரதமர் மனைவி எரித்துக் கொலை..! நாடாளுமன்ற கட்டிடம், அமைச்சர் வீடுகளுக்கு தீ வைப்பு..!
Former Nepali Prime Ministers wife burned to death by protesters
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் போராட்டம் வெடித்துள்ள நிலையில் இன்று தீவிரம் அடைந்துள்ளது. அந்நாட்டு அரசாங்கம் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய போதிலும் போராட்டம் தணிந்தபாடில்லை. இதனால், நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஜென்- Z எனப்படும் இன்றைய 2K கிட்ஸ் தலைமுறையினர் வீதியில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது.

இதனால் கட்டுக்கடங்காத வன்முறை சூழலும் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள்-பாதுகாப்புப் படையினர் இடையே மோதல் ஏற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.
கட்டுக்கடங்காமல் போன போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், அமைச்சர்களின் வீடுகள், முன்னாள் பிரதமர் ஜலாநாத் கனாலின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. இதில், வீட்டில் இருந்த முன்னாள் பிரதமரின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார் பரிதமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் படுகாயம் அடைந்த ராஜ்யலட்சுமி, கிர்திபுர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அத்துடன், நேபாளத்தில் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கும் தீ வைக்கப்பட்ட நிலையில், காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்ட்டுள்ளது. அமைச்சர்கள் ராணுவ ஹெலிகாப்டர்களில் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இன்னும் நிலைமை மோசமாகி இருப்பதால், இந்தியர்கள் யாரும் நேபாளத்திற்கு செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
English Summary
Former Nepali Prime Ministers wife burned to death by protesters