முன்னாள் கனடா பிரதமர் பாப் பாடகியுடன் படகில் உல்லாசம்..? வைரலான காட்சிகள்! - Seithipunal
Seithipunal


முன்னாள் கனடா பிரதமர் அரை நிர்வாண கோலத்தில் பாப் பாடகியுடன் படகில் உல்லாசமாக ? இருந்தாரா என்பதான  காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா பார்பரா என்ற இடத்தில் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பாப் பாடகி கேத்தி அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றனர். அப்போது அவர்கள் படகு ஒன்றில் சவாரி செய்தபடி, அதன் உச்சியில் நின்றதுடன் கேத்தி கருப்பு நிற பிகினி உடையுடன் காணப்படுகிறார்.

இதுபற்றி அந்த காட்சியை கண்ட நபர் ஒருவர் கூறும்போது, கேத்தி தன்னுடைய படகை மற்றொரு படகின் அருகே கொண்டு வந்து நிறுத்தினார். இதன்பின்னர் 2 பேரும் அவர்களுடைய வேலையை தொடங்கி விட்டனர். கேத்தி யாருடன் இருக்கும் அந்த நபரின் கையில் இருந்த டாட்டூவைபார்த்த பின்னரே அவர் ஜஸ்டின் ட்ரூடோ என உடனடியாக புரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

அவர்கள் இருவரும் கடந்த ஜூலை முதல் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு, மான்ட்ரீல் நகரில் இரவு விருந்து ஒன்றிலும் இரண்டு பேரும் ஒன்றாக கலந்து கொண்டிருக்கின்றனர். 

நடிகர் ஆர்லேண்டோ புளூம் உடனான கேத்தியின் தொடர்பு கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது. 2016-ம் ஆண்டு முதல் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்த அவர்களுக்கு, 2020-ம் ஆண்டு டெய்சி டவ் என்ற மகள் பிறந்துள்ளார். மகளை இருவரும் சேர்ந்து வளர்ப்பது என முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில், கணவரை விட்டு விலகியுள்ள கேத்தி, ட்ரூடோவுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Canadian Prime Minister enjoys boating with wife?! Viral scenes


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->