கெர்சன் நகரில் உணவுக்காக மக்கள் தவிப்பு! ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக கெர்சன் நகரில் சுமார் 3 லட்சம் பேர் உணவுக்காக தவித்து வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து நான்காவது வாரமாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த போரால் உக்ரை கடும் பஞ்சத்தை எதிர்நோக்கி இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைனின் கெர்சன் நகரை விட்டு பொதுமக்கள் யாரையும் வெளியில் செல்ல ரஷ்ய ராணுவம் அனுமதி அளிக்காததால் கெர்சன் நகரம் மிகப்பெரிய பஞ்சத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

மிகவும் மனிதாபிமான அடிப்படையிலான தேவைகளை நிறைவேற்ற கூட ரஷ்ய ராணுவம் பொது மக்களை அனுமதிப்பது இல்லை என்றும் உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Food famine in Ukraine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->