இந்தோனேஷியாவில் வெள்ள நிலச்சரிவு! -2 லட்சம் மக்கள் பாதிப்பு, உயிரிழப்புகள் 248 -ஆகா உயர்வு...! - Seithipunal
Seithipunal


ஆசியாவின் தீவு நாடான இந்தோனேசியா, தொடர்ந்து கொந்தளிக்கும் கடும் மழையின் தாக்கத்தில் சுமத்ரா தீவின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்கள் பெரும் அழிவில் தத்தளிக்கின்றன. கடந்த சில நாட்களாக இடைவிடாது கொட்டிய மழை பல இடங்களில் வெள்ளப் பெருக்கையும் நிலச்சரிவையும் உருவாக்கி, 2 லட்சம் மக்களுக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கி, பல நகரங்கள் உலகத்துடன் இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகம் பாதிப்படைந்து இருள் சூழ்ந்த சூழலில் மக்கள் தஞ்சம் தேடி போராடி வருகின்றனர்.இந்த பரிதாபகரமான சூழலில், வெள்ளம்–நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.

பேரிடர் தாக்கம் கடுமையாக இருந்த பகுதிகளுக்கு, பாதை இல்லாமல் மீட்பு குழுக்கள் சென்று சேர முடியாததால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வடக்கு சுமத்ராவில் உள்ள மத்திய தபனுலி மாவட்டமே மிக மோசமான பாதிப்பை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் காணாமல் போனோரின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் அரசு திறந்த நிவாரண முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் பாலங்கள், சாலைகள், குடியிருப்பு வளாகங்கள் அனைத்தையும் சிதைத்ததால் மீட்பு நடவடிக்கைகள் பலத்த தடைகளை எதிர்கொண்டு வருகின்றன.

ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு படைகள் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியில் முழு சக்தியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில், கடந்த வியாழன் காலை சுமத்ரா தீவில் ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற பலத்த நிலநடுக்கமும் பதிவானது. இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள இந்தோனேசியா ஏற்கனவே நிலநடுக்க-சுனாமி அபாய மண்டலத்தில் உள்ளதால், மழை, வெள்ளம், நிலச்சரிவு, தரை அதிர்வு உள்ளிட்ட பல்வகை இயற்கை பேரிடர்களால் மக்கள் சீர்குலைந்து துன்புறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Floods landslides Indonesia 2 lakh people affected 248 death rises


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->