உக்ரைன் போர் தாக்குதல் : டொனெட்ஸ்க் மாகாணத்தில் ஐந்தாயிரம் பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷியா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கியது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் உள்ள பல நகரங்களை ரஷிய படைகள் தாக்கி வருகின்றனர். 

ஆனால், இதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்கு உக்ரைன் படைவீரர்கள் மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

அதன் படி, உக்ரைன் நாட்டின் உள்ள ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால், இந்த பிராந்தியத்தில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் உள்ளிட்ட இரண்டு மாகாணங்கள் உள்ளன. 

இந்நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் டொனெட்ஸ்க் மாகாணத்தில் சுமார் ஐந்து ஆயிரம் பேர் உயிரிழந்ததாக மாகாண தலைமை குற்றம் சாட்டியுள்ளது. 

இந்த உயிரிழப்பு தொடர்பாக உக்ரைன் நாட்டின் போர்க்குற்றங்கள் தொடர்பான கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திடம் மாகாணங்களின் நிர்வாகம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. 

அந்த அறிக்கையில், "கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி முதல் உக்ரைன் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 132 சிறுவர்கள் உள்பட 4,392 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும், 3,926 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five thousand peoples died in donetsk province for ukrine war attack


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->