பிலிப்பைன்ஸில் பயங்கரம்: மாகாண கவர்னர் உட்பட 5 பேர் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ் நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாணத்தின் கவர்னர் ரோயல் டெகாமோ உட்பட ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாணத்தின் கவர்னர் ரோயல் டெகாமோ(56). இவர் நேற்று பாம்ப்லோனா பகுதியில் தொகுதி மக்களுக்கு உதவிகளை விநியோகித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய மற்றும் ஆயுதப்படையினர் சீருடை அணிந்திருந்த 6 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக கவர்னரை சுட்டுள்ளனர். இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டில் கவர்னர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ், தனது அரசியல் கூட்டாளியின் படுகொலையை கண்டித்ததோடு, இப்போது சரணடைவதே உங்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என்று குற்றவாளிகளை எச்சரித்தார். மேலும் இந்த கொடூரமான குற்றத்தின் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் வரை எனது அரசாங்கம் ஓய்வெடுக்காது என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய ஆறு துப்பாக்கி ஏந்தியவர்கள் உட்பட 10 சந்தேக நபர்களை தீவிரமாக தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Five Killed including Provincial governor in shooting in Phillipines


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->