ஆண்டின் முதல் சூரிய கிரகணம்...! 4½ மணி நேரம் நீளும் விண்வெளி விருந்து...!
first solar eclipse year 4 and half hour space party
பூமி, நிலா, சூரியன் மூன்றும் ஒரே கோட்டில் வரிசையாக நிற்கும் அந்த அபூர்வ தருணமே சூரிய கிரகணம். இந்த ஆண்டின் முதல் வானியல் அதிசயம் இன்று (செவ்வாய்க்கிழமை) வானில் நிகழ இருக்கிறது.

இன்று மதியம் 3:26 மணிக்கு கிரகணம் தொடங்கி, மாலை 5:41 மணிக்கு உச்ச கட்டத்தை எட்டும். பின்னர் மெதுவாக விலகி, இரவு 7:57 மணிக்கு நிறைவடைகிறது.
மொத்தம் 4 மணி நேரம் 31 நிமிடங்கள் நீளும் இந்த நிகழ்வு வானியல் ஆர்வலர்களுக்கு அரிய விருந்தாக அமையும்.
நிலா, சூரியனை கிட்டத்தட்ட முழுவதும் மறைக்கும் போது, சூரியனின் 96.20% பகுதி மறைந்து, அதன் சுற்றில் தீப்பொலிவுடன் பிரகாசிக்கும் வளையம் மட்டும் தென்படும்.
இதனால் ‘தீ வளையம்’ போல மின்னும் கண்கவர் காட்சி உருவாகும்.இந்த கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது.
ஆனால் அண்டார்டிகா பகுதி முழு கிரகணத்தை அனுபவிக்கிறது. அர்ஜென்டினா, சிலி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகுதி கிரகணமாக இந்த வானியல் அதிசயத்தை காணும் வாய்ப்பு கிடைக்கிறது.
English Summary
first solar eclipse year 4 and half hour space party