இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு : பாலஸ்தீன சிறுவன் பலி.! - Seithipunal
Seithipunal


சமீப நாட்களாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருக்கும் மேற்குகரை பகுதியில் அமைந்துள்ள பெத்லகேம் நகரில் ஏராளமான பாலஸ்தீன அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு பாலஸ்தீன பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக கூறி இஸ்ரேல் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. 

இந்நிலையில் நேற்று இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வழக்கம் போல் பெத்லகேம் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், இதற்கு அங்கிருந்த பாலஸ்தீன இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டது. 

இந்த மோதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அகதிகள் முகாமில் இருந்த பதினைந்து வயது சிறுவன் சரிந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாஸ்தீன வெளியுறவு அமைச்கம் "இது தங்கள் நாட்டின் சிறுவர்களுக்கு எதிரான இஸ்ரேல் ராணுவத்தின் கொடிய குற்றம்" என்று சாட்டியது.

இதற்கு இஸ்ரேல் ராணுவம், "முதலில் பாலஸ்தீன எதிர்ப்பாளர்கள் ராணுவத்தினர் மீது நெருப்பு வைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்களை வீசிய பிறகுதான்  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது" என்று விளக்கமளித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifteen years old boy died for isrel gun shoot


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->