வரலாற்றில் இன்று.. அணுக்கொள்கையின் தந்தை பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


வரலாற்றில் இன்று.. அணுக்கொள்கையின் தந்தை பிறந்த தினம்.!

அணுக்கொள்கையின் தந்தை, ஜான் டால்டன் 1766ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே. பலவித நீர்மங்களின் ஆவியழுத்தத்தை கவனித்து, சமமான வெப்பநிலை மாற்றத்தில், எல்லா நீர்மங்களின் ஆவியழுத்தமும் சமமாக இருக்கும் என்னும் கோட்பாட்டை கண்டறிந்தார்.

இவர் மிகச்சிறிய பிளக்க முடியாத அடிப்படை பொருளுக்கு அணு என்று பெயரிட்டார். மேலும், அணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்டார்.

நவீன அணுக்கோட்பாட்டை உருவாக்கிய ஜான் டால்டன் 1844ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மறைந்தார்.

இன்றைய முக்கிய நிகழ்வுகள்

 1889ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும், வழக்கறிஞராகவும் விளங்கிய சரத் சந்திர போஸ் பிறந்தார்.

 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பார்கோடை கண்டறிந்தவர்களுள் ஒருவரான நார்மன் ஜோசப் உட்லேண்ட், நியூ ஜெர்சியிலுள்ள அட்லாண்டிக் நகரத்தில் பிறந்தார்.

1860ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி அமெரிக்க சமூகப் பணியாளர், எழுத்தாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ஜேன் ஆடம்ஸ் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தில் பிறந்தார்.

1951ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father of nuclear Policy John Dalton birthday today


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->