20க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டு: லண்டனில் பிரபல நடிகர் கைது: சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்..! - Seithipunal
Seithipunal


பிரபல ஹாலிவுட் நடிகர் நோயல் கிளார்க் மீது, கடந்த 2021-ஆம் ஆண்டு, 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இது தொடர்பாக 'தி கார்டியன்' பத்திரிகை செய்தி வெளியிட்டது.

அதனை எதிர்த்து நோயல் கிளார்க் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில், தோல்வியடைந்தார். அவர் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள், 'பெரும்பாலும் உண்மையே' என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், பத்திரிகையின் சட்ட செலவுகளுக்காக சுமார் 60 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தவும் அவருக்கு உத்தரவிட்டது.

நோயல் கிளார்க் மீதான குற்றச்சாட்டுகளால், அவருக்கு வழங்கப்பட்ட 'பாஃப்டா விருது' உள்ளிட்ட அனைத்து கௌரவர்களும் திரும்பப் பெறப்பட்டன. முன்னதாக, இது தொடர்பான முதல்கட்ட போலீஸ் விசாரணையின் போது குற்ற வழக்கு பதிவு செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்கு கைவிடப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, லண்டன் கென்சிங்டனில் உள்ள நோயல் கிளார்க்கின் வீட்டில் காவல்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நீரமாகி இந்த் சோதனை நீடித்தது.

குறித்த சோதனை முடிவில், முக்கிய ஆவணங்கள் மற்றும் மடிக்கணினி அடங்கிய பெட்டிகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, விசாரணைக்காக கைது செய்யப்பட்ட நோயல் கிளார்க், பின்னர் விடுவிக்கப்பட்டார். கைதுக்கான காரணத்தை காவல்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், கடந்த 01-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட புதிய விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous actor Noel Clarke arrested in London on more than 20 sexual assault charges


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->