திமுகவில் இணைந்த அதிமுக, பாஜக, நிர்வாகிகள்..அமோக வரவேற்பு கொடுத்த முதலவர்!
The DMK welcomed the joined ADMK BJP and administrators with a grand reception
அதிமுக, பாஜக, பாமக நிர்வாகிகள் 70-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்.
இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், பாஜகவைச் சேர்ந்த மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவரும், ஒன்றிய முன்னாள் தலைவருமான பேரம்பாக்கம் எஸ்.பகதூர்சேட் தலைமையில், காஞ்சிபுரம் மாநகராட்சி, 16-வது வார்டு கவுன்சிலர் சாந்தி துரைராஜ், 27-வது வார்டு கவுன்சிலர் ஷாலினி, அதிமுகவின் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வழக்கறிஞர் இ.ராஜன்காந்தி -உள்ளிட்ட அதிமுக - பாஜக - பாமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய மற்றும் அணி நிர்வாகிகள் இன்று திமுகவில் இணைந்தனர்.
அப்போது திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் க.சுந்தர், எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செயலாளர் க.செல்வம், எம்.பி., ஒன்றியக் கழகச் செயலாளர்கள் கெ.ஞானசேகரன், டி.குமார், வி.ஏழுமலை, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ப.அப்துல்மாலிக், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சி.ராதாகிருஷ்ணன், ஆகியோர் உடனிருந்தனர்.
பாஜகவைச் சேர்ந்த சித்தாமூர் ஒன்றியம், ஒன்றிய சிறுபான்மை அணி தலைவர் பி.அமீர்பாஷா, ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் எஸ்.பாஸ்கர், ஒன்றிய ஓபிசி அணி தலைவர் ஏ.சண்முகம், ஒன்றிய துணைத்தலைவர் என்.வெங்கட்ராமன், ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் எஸ்.பாலமுருகன், கிளைத் தலைவர் வி.அய்யாதுரை, வாக்குச்சாவடி முகவர் எஸ்.செந்தில்குமார், கிளைத் தலைவர் பி.லோகநாதன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இ.ராஜேந்திரன்;
இளநகர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்,கிளைச் செயலாளர் மோகன்தாஸ், கம்மாளம்பூண்டி கிளைச் செயலாளர் பிரபாகரன்,மருத்துவர்கள் டாக்டர் சீனிவாசன், டாக்டர் திருமலைராஜ், டாக்டர் மோகனபிரகாஷ், டாக்டர் தமிழரசன், டாக்டர் ராம்ஜெயராஜ், டாக்டர் விக்னேஷ்; பொறியாளர்கள் ஜீவானந்தன், பி.இ., டால்அசாப், எம்.எஸ்சி., சையத்யூசுப், பி.இ., சையத்ஷன்வாஸ், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
The DMK welcomed the joined ADMK BJP and administrators with a grand reception