போலி எக்ஸ் கணக்குகள்: ஈரானுடனான இந்தியாவின் உறவுக்கு ஆபத்து; ஈரான் தூதரகம் எச்சரிக்கை..!
Fake X accounts risk to India relations with Iran and Iranian embassy warns
ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போர் நடைபெற்ற போது ஈரானின்அணுசக்தி நிலைகள் மீது இஸ்ரேல் பி2 வகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அப்போது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்காக இந்திய வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரபரப்பட்டன. இந்நிலையில், போலி சமூக வலைதள கணக்குகளால் இந்தியா - ஈரான் நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு ஆபத்து ஏற்படுமென இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-9hbvc.png)
இதனிடையே, இந்தியாவுடனான உறவை சீர்குலைக்கும் விதமாக, போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் அவதூறுகள் பரப்பப்படுவதாக இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன், சில போலி கணக்குகளின் விபரங்களை தங்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ஈரான் ராணுவம் மற்றும் அமைச்சகங்களின் பெயரில், அதிகாரப்பூர்வ பக்கங்களைப் போல தோற்றமளிக்கும் விதமாக, ப்ளூ டிக்குடன் போலி கணக்குகளின் மூலம் அவதூறு பரப்பப்படுவது உறுதி செய்துள்ளது.
பல போலி சமூக வலை கணக்குகள் மூலம் ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குகளைப் போல சித்தரிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், இந்த போலி கணக்குகள் ஈரானுக்கு சொந்தமானவை அல்ல என்றும் ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
English Summary
Fake X accounts risk to India relations with Iran and Iranian embassy warns