டிரம்ப் மீதான தடையை நீக்க முடியாது! பேஸ்புக் நிர்வாகம் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இருந்தார். இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்ததை அடுத்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அதிபர் மாளிகை வளாகத்தில் டிரம்ப ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். 

இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. டொனால்ட் டிரம்ப் தமது சமூக வலைதளங்கள் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டார். இதனால் அவருடைய பேஸ்புக் கணக்கை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்து அந்நிறுவனம் உத்தரவிட்டது. அதே போன்று ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் ஆகிய சமூக வலைதளங்களில் இருந்தும் டிரம்ப் நீக்கப்பட்டார். 

சமீபத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் அவர் மீதான தடையை பேஸ்புக் விளக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த தடையையும் நீக்கும் எண்ணம் இல்லை என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதே வேளையில் வரும் ஜனவரி 7ஆம் தேதி உடன் பேஸ்புக் விதித்த ட்ரம்ப் மீதான தடை முடிவடைகிறது. இதேபோன்று சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் ட்ரம்ப் மீது விதித்த முந்தைய தடைகள் சரி இல்லை என கருத்து தெரிவித்திருந்தார். இதனால் டிரம்ப் மீதான தடை விளக்குவது பற்றி ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக ரீதியான மாற்றத்திற்கு பிறகு பரிசளிக்கப்படும் என எல்லார் மஸ்க் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Facebook said ban on Trump cannot be removed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->