மெக்சிகோவில் சுட்டெரிக்கும் வெயில்..! 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் கடும் வெப்பத்தால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மெக்சிகோவில் ஜூன் மாத தொடக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. மேலும் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் (122 ஃபாரன்ஹீட்) பதிவானது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தமுடியாபமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். மேலும் கடும் வெப்பத்தால் மெக்சிகோவின் வடக்குப் பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதில் ஜூன் 12 மற்றும் 25 -க்கு இடைப்பட்ட நாட்களில் மெக்ஸிகோவில் கிட்டத்தட்ட 1,000 பேர் வெப்பம் தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவற்றில் 104 இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்று நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் வடகிழக்கு மாநிலமான நியூவோ லியோனில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல இறப்புகளும் ஹீட் ஸ்ட்ரோக்கால் ஏற்பட்டதாகவும், ஒரு சில நீரிழப்பு காரணமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வடகிழக்கு, வடக்கு, மத்திய, தென் பசிபிக் கரையோர மாநிலங்களில் கடும் வெப்பம் தொடரும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Extreme Heat Kills over 100 In Mexico


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->