எப்ஸ்டீன் ஆவணங்கள் அதிர்ச்சி: உலக பிரபலங்கள் பெயர் சர்ச்சையில்… ‘நான் சந்தித்ததே இல்லை’- தலாய் லாமா விளக்கம்
Epstein documents shock World celebrities names controversy I have never met him Dalai Lama clarifies
அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் உலக அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட விசாரணை கோப்புகள், 2,000க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் புகைப்படங்கள் கடந்த ஜனவரி 31ஆம் தேதி பொது வெளியில் வெளியிடப்பட்டன.

இந்த ஆவணங்களில் உலகளாவிய செல்வாக்கு கொண்ட பல முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோருடன் திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் பெயரும் பட்டியலில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், தனது பெயரை இவ்விவகாரத்துடன் இணைத்து வெளியான தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்று தலாய் லாமா தெளிவாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த கோப்புகளில் அவரது பெயர் 169 முறை இடம்பெற்றதாக கூறப்பட்டாலும், அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனை அவர் ஒருபோதும் நேரில் சந்தித்ததே இல்லை என அவரது அலுவலகம் விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளது.
English Summary
Epstein documents shock World celebrities names controversy I have never met him Dalai Lama clarifies