விளம்பரம் என்றாலும் நியாயம் வேண்டாமா?.. நூதன முறையில் சமோசா விண்ணிற்கு அனுப்பப்பட்டது.! - Seithipunal
Seithipunal


சமோசாவை பிரபல சிற்றுண்டி நிறுவனமான சாய்வாளா விண்ணிற்கு அனுப்பியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டு வரும் இந்திய சிற்றுண்டி உணவகம் சாய்வாளா. இந்த நிறுவனம் தனது உணவு பொருட்களை பிரபலப்படுத்துவதற்காக, வித்தியாசமான முயற்சியை தேர்ந்தெடுத்துள்ளது. 

இதனையடுத்து, ஹீலியம் பலூனில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தி, பாராசூட் மூலமாக சமோசா உள்ளிட்ட பொருட்களை வைத்து பேக் செய்து பறக்கவிட்டுள்ளது. ஆனால், இந்த பொருள் மறுநாளே பிரான்சில் கீழே விழுந்து மரத்தின் கிளையில் சிக்கியுள்ளது. 

இதுதொடர்பான தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய்வாளா நிறுவனம் தெரிவிக்கவே, இதனை அறிந்த நபர் ஒருவர் அங்கு சென்று சமோசாவை கைப்பற்றியுள்ளார். சாய்வாளா நிறுவனத்தின் விளம்பர யுக்தி எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

England Samosa Sent Space Using Helium Balloon


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->