எலான் மஸ்க் குடும்பம்: மகனுக்கு ‘சேகர்’ என்ற பெயர்...! பெயர் காரணம் தெரியுமா...?
Elon Musk family Son named Shekhar Do you know reason name
உலகத் தரவரிசை பணக்காரரும், டெஸ்லா நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ள எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது குடும்பம், மனைவி ஷிவான் சிலிஸ் மற்றும் குழந்தைகள் பற்றி திறந்தவெளியில் பகிர்ந்துள்ளார்.
பேட்டியில் அவர் குறிப்பிட்டதாவது, தனது மகனுக்கு பெயரை நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக ‘சேகர்’ என்று வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எலான் மஸ்க் கூறுகையில்,"எனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியைக் கொண்டவர். அவருக்கும் எனக்கும் பிறந்த மகன்களில் ஒருவருக்கு, விஞ்ஞானி சந்திரசேகரின் நினைவாக ‘சேகர்’ என்ற பெயரை சூட்டியுள்ளோம்.
ஷிவான் குழந்தையில் தத்துக்கொடுக்கப்பட்டவர். அவர் கனடாவில் வளர்ந்தார். அவரது தந்தை பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த வெளிநாட்டு மாணவர் என்று நினைக்கிறேன்.
முழு விவரங்கள் எனக்கு தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.இதனால், எலான் மஸ்க்-ஷிவான் சிலிஸ் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Elon Musk family Son named Shekhar Do you know reason name