வங்கதேசத்தில் திடீர் நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 4.0ஆக பதிவு.! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா அருகே இன்று அதிகாலை 4.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:15 மணிக்கு, டாக்காவிலிருந்து கிழக்கே 29 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் 100 முதல் 200 கிலோமீட்டர் தொலைவில் 7-8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் தலைநகரில் உள்ள பலவீனமான கட்டிடங்கள் சேதமடையலாம் என்றும் நிலநடுக்க நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake of 4 magnitude hits Bangladesh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->