ஆப்கானிஸ்தானில் காபூலில் மீண்டும் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; பீதியில் மக்கள்..!
Earthquake hits Afghanistan again
ஆப்கானிஸ்தானில் காபூல் அருகே மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு பீதியை கிளப்பியுள்ளது. பூமிக்கு அடியில் 130 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவில் 5.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே நேற்று ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாநிலத்தை மையமாகக் கொண்டு, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் ரிக்டர் அளவில் 6.3 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பலமுறை நில அதிர்வு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 1411 பேர் வரை உயிரிழந்தனர். 3500 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, சுமார் 12,000 மக்கள் இந்த நிலநடுக்கத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
English Summary
Earthquake hits Afghanistan again