காந்தப்புலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு... ஐரோப்பிய விண்வெளி மையம் பரபரப்பு தகவல்.!!
Earth Magnetic Field got damage 10 percentage announce Europe space station
பூமியினுடைய காந்தப்புலம் சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து நம்மை பாதுகாப்பு தொடர்பாக அனைவருக்கும் நன்றாக தெரியும். தற்போதுள்ள ஆய்வுகளின் படி காந்தப்புலம் பலவீனமாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், சராசரியாக கடந்த இரண்டு நூற்றாண்டில், பூமியின் காந்தப்புலம் தனது வலிமையில் 10 விழுக்காடு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவிற்கு இடையேயான தெற்கு அட்லாண்டிக் பகுதியில் இந்த விரைவான சுருக்க மாற்றம் காணப்பட்டுள்ளதாகவும், கடந்த 50 வருடத்தில் பிராந்தியத்திற்கு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காந்தப்புலம் பலவீனமடைந்து வருவதால் செயற்கைக்கோள் மற்றும் விண்கலத்திற்கு தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தால் மக்களுக்கு பெரிய பாதிப்பு அல்லது பிற பிரச்சனைகள் ஏற்படாது என்றாலும், விண்கலம் மற்றும் செயற்கைகோள்களில் தொழில்நுட்ப பிரச்னையை ஏற்படுத்துகிறது. இந்த விஷயம் குறித்து ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இதில் கடந்த ஐந்து வருடத்தில் குறைந்தபட்ச தீவிர பாதிப்பின் இரண்டாவது மையம் ஆப்பிரிக்காவின் தென்மேற்கு பகுதி நோக்கி நகர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Earth Magnetic Field got damage 10 percentage announce Europe space station