ஒப்புதல் இல்லாமல் ரூ.13.75 லட்சம் கடன்...! தனியார் வங்கிக்குச் செம்ம அடி கொடுத்த நுகர்வோர் நீதிமன்றம்...! - இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு - Seithipunal
Seithipunal


சென்னையைச் சேர்ந்த ஒருவரின் ஒப்புதல் இல்லாமலேயே ரூ.13.75 லட்சம் தனிநபர் கடன் வழங்கி, அதில் ரூ.9.5 லட்சத்தை உடனடியாகப் பிறரின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிய தனியார் வங்கியின் செயல்பாட்டில் குறைபாடு இருப்பதாக நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய கடன் கணக்கை முடிப்பதுடன், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும், வழக்குச் செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நிஹ்மத்துல்லா என்பவர், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்ததாவது,"கடந்த 2023-ஆம் ஆண்டு தனியார் வங்கி ஒன்று, தனது அனுமதியைப் பெறாமலேயே ரூ.13.75 லட்சம் தனிநபர் கடனை அனுமதித்தது. அதுமட்டுமின்றி, கடன் தொகையிலிருந்து ரூ.9.5 லட்சத்தை உடனடியாக வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியது.

இதைத்தொடர்ந்து, கடனைத் திருப்பிச் செலுத்துமாறு வங்கி நிர்வாகம் தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பியது. தனது ஒப்புதல் இல்லாமல் கடன் வழங்கப்பட்டதுடன், பெருந்தொகையும் பிறரின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதால், வங்கியின் தவறான செயல்பாட்டுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், கடன் வழங்கப்பட்ட விதம் மற்றும் அதிலிருந்து பெருந்தொகை உடனடியாக மாற்றப்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்தது.அப்போது, வங்கி நிர்வாகம் ஒரே நாளில் கடனை அனுமதித்திருப்பதும், ரூ.13.75 லட்சம் கடன் வழங்குவதிலும், அதிலிருந்து ரூ.9.5 லட்சம் உடனடியாகப் பிறரின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுவதைத் தடுப்பதிலும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியிருப்பதும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில், வங்கியின் சேவையில் குறைபாடு இருப்பதாக ஆணையம் தீர்மானித்தது.இதையடுத்து, சர்ச்சைக்குரிய கடன் கணக்கை முழுமையாக முடித்து, அதற்கான சான்றிதழை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகத்துக்கு ஆணையம் உத்தரவிட்டது.மேலும், வங்கியின் சேவைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நிஹ்மத்துல்லாவுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரமும், வழக்குச் செலவுக்காக ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.55 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Consumer court slaps private bank 13point75 lakh loan without approval Action order pay compensation


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->