அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம்.. டிரம்ப் சொல்கிறார்!
Dont trade nuclear missilesTrump says
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் மீண்டும் கூறினார்.
சவுதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது, நான் பதவி ஏற்ற நாளிலேயே போரை நான் விரும்ப மாட்டேன் என்று கூறினேன். அதனால்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த சண்டையை நான் பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தினேன் என கூறினார்.
மேலும் அவர் பேசும்போது ,அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை வர்த்தகம் செய்வோம் என்றேன்.வர்த்தகத்தை முன்னிருத்தி இந்த உடன்பாட்டை எட்டவைத்தேன். 'நண்பர்களே, வாருங்கள். ஒரு ஒப்பந்தம் செய்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம்" என்று அவர்களிடம் நான் கூறினேன்.
எனவே சண்டையை நிறுத்திவிட்டார்கள். சிறியதாகத் தொடங்கிய போர் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் நிலை உருவாகி இருந்தது" என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Dont trade nuclear missilesTrump says