இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செயல்படும் டிரம்பின் முகநூல் கணக்கு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிபர் டிரம்புக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜோ பைடன். இவருக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி நாடாளுமன்றம் கூடியது. 

அப்போது, முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, முன்னாள் அதிபர் டிரம்ப் தனது பதிவுகள் மூலம் நாட்டில் வன்முறையை தூண்டியதாக கூறி முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் அவரது கணக்கை முடக்கின. 

இந்த நிலையில், கடந்த ஆண்டு டுவிட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க், டுவிட்டரில் டிரம்ப் மீதான தடையை நீக்கினார். இதைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனமும் டிரம்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுவதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. 

அந்த அறிவிப்பின் படி, டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடை நீக்கப்பட்டு நேற்று முதல் செயல்பட தொடங்கின. டிரம்ப் மீண்டும் விதிமுறைகளை மீறினால் அவரது வலைதள கணக்குகள் ஒரு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை முடக்கப்படும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதிபர் ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீண்டும் செயல்பட தொடங்கினாலும் அவற்றை அவர் பயன்படுத்துவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால், அவர் தனக்கென பிரத்தியேகமாக 'டுரூத் சோஷியல்' என்கிற சமூக வலைத்தளத்தை உருவாக்கி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

donald trumph facbook and instagram accounts active after two years


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->