உக்ரைன் - ரஷ்யா போர் முடிவு..? புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய ட்ரம்ப்..!
Donald Trump Speaks to Russian President Putin
அமெரிக்க அதிபர் டொனால்டு, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் ரஷிய சிறை கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மேலும், ரஷ்ய அதிபர் புதினுடன் பேசியது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது; ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன்தான் தொலைபேசி வாயிலாக பேசினேன். ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்தது. உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலரின் சக்தி என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இருநாடுகளின் பலம் மற்றும் பயன்கள் குறித்தும் இருவரும் உரையாடினோம். உக்ரைனுடனான போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும். என்பதை இருவரும் முதலில் ஒப்புக்கொண்டுள்ளோம்.
இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளோம். அமெரிக்காவுக்கு புதினும், ரஷியாவுக்கு நானும் செல்ல ஒப்புக்கொண்டுள்ளோம். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Donald Trump Speaks to Russian President Putin