ரூ.125 கோடி மதிப்புள்ள குண்டு துளைக்காத, நம்பர் பிளேட் இல்லாத, கவச உடல் அமைப்பினை கொண்ட காரை பயன்படுத்துபவர் யார் தெரியுமா?
Do you know who uses a car with a bulletproof armored body car worth Rs 125 crore
உலகிலேயே அதிக விலையுயர்ந்த, தற்போதைய தோராய மதிப்பின் படி, 10 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 125 கோடி இந்திய ரூபாய்க்கு மேல்) விலை கொண்ட கார். இது உலகில் மொத்தம் இரண்டே கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக குண்டு துளைக்காத மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை தாங்கும் திறன் கொண்ட கவச உடல் அமைப்பினை இந்த கார் பெற்றுள்ளது. அத்துடன், கேஸ் தாக்குதல்களில் இருந்து காக்க, காரின் உட்பகுதி காற்று புகாதவாறு சீல் செய்யப்பட்டுள்ளது.
'பென்ட்லி ஸ்டேட் லிமோசின்' என்பது இங்கிலாந்து அரசு குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ அரசு காராகும். இது 2002-இல் மறைந்த 02-ஆம் எலிசபெத் ராணியின் பொன்விழா நினைவாக, பென்ட்லி நிறுவனம் இந்த சொகுசு காரை பிரத்தியேகமாக வடிவமைத்து பரிசளித்தது.

அதாவது, உலகிலேயே மிக அதிக மதிப்புடைய, தலைவர்களின் காராக இது கருதப்படுகிறது. தற்போது பக்கிங்ஹாம் அரண்மனையின் ராயல் மியூஸ் (Royal Mews) பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த காரை தற்போது இங்கிலாந்து அரசர் 03-ஆம் சார்லஸ் பயன்படுத்தி வருகிறார்.
காரின் சிறப்பம்சங்கள்;
பென்ட்லி அர்னேஜ் மாடலின் அடிப்படையில், அரச குடும்பத்தினர் எளிதாக எழும்பி நேராக நின்றபடி வெளியேறும் வகையில் இதன் கூரை மிகவும் உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் பின்பக்க கதவுகள் 90 டிகிரி கோணத்தில் அகலமாக திறக்கும் வசதி கொண்டவை. 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் பி எய்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இது 400 குதிரை திறன் மற்றும் 835 Nm டார்க்கை உருவாக்குகிறது. இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. நீளம் 6220 மில்லி மீட்டர், அகலம் 2000 மில்லி மீட்டர் மற்றும் உயரம் 1770 மில்லி மீட்டர் ஆகும்.

முழுமையாக குண்டு துளைக்காத மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை தாங்கும் திறன் கொண்ட கவச உடல் அமைப்பு பெற்றுள்ளது. கேஸ் தாக்குதல்களில் இருந்து காக்க, காரின் உட்பகுதி காற்று புகாதவாறு சீல் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் டயர்கள் கெவ்லார் மூலம் பலப்படுத்தப்பட்டவை. இதனால் துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகும் கார் தொடர்ந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிற அதிகாரப்பூர்வ அரசு கார்களை போலவே இதற்கும் நம்பர் பிளேட் கிடையாது. அரசர் அல்லது ராணி காரில் பயணிக்கும் போது, முகப்பில் உள்ள வழக்கமான பென்ட்லி சின்னத்துக்கு பதிலாக, புனித ஜார்ஜ் டிராகனை கொல்லும் பிரத்தியேக அரசர் சின்னம் பொருத்தப்படும்.
2009 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தில் கொண்டு, இந்த இரு கார்களும் பயோ எரிபொருள் மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டன.
English Summary
Do you know who uses a car with a bulletproof armored body car worth Rs 125 crore