அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ள உயர்நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


வருவாய்த்துறை அமைச்சரான செங்கோட்டையன் தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்காக தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்புமனுவை ஏற்றதே தவறு எனக் கூறியிருந்தார். அத்துடன், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி செங்கோட்டையன் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக தள்ளி வைத்த்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The High Court has adjourned the election case against Minister Sengottaiyan for a verdict


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->