நேபாளம் வெள்ளம்; நாடு திரும்பியுள்ள 21 தமிழர்கள்; ''மற்றவர்களைத் தொடர்புகொள்ளத் தொடர் முயற்சி''; அமைச்சர் ராஜ்மோகன் தகவல்..!
Minister Rajmohan informs about 21 Tamils who have returned from Nepal
நேபாளம் - சீன எல்லையில் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கில் சிக்கி இதுவரை 547 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். நேபாளமே நிலைகுலைந்துள்ள நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 57 பேர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். இவர்களில் 21 பேர் அசம்பாவிதத்தில் சிக்காமல் தப்பித்த நிலையில், மீதம் இருக்கும் 36 பேரின் நிலை என்ன என்று தெரியாமல் உள்ளது.
நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பித்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களை, தமிழ்நாடு அமைச்சர்கள் குழு சந்தித்து அவர்களை வரவேற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

காத்மண்டுவில் இருந்து டெல்லி வந்தவர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்துள்ளதாகவும், டெல்லியில் இருந்து 21 பேரும் இன்று இரவே சென்னை திரும்புவதாகவும், அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கும் வீடுகளுக்கும் சென்றடைய ரயில், வாகனம் உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து வருகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சுற்றுலாவுக்கு 57 பேர் மூன்று பேருந்துகளில் சென்றுள்ளனர். அதில், இடையில் இருந்த பேருந்தில் பயணித்தவர்கள்தான் தற்போது திரும்பியுள்ளனர். மேலும், முதல் மற்றும் மூன்றாம் பேருந்துகள் குறித்தான தகவல் கிடைக்கவில்லை என்றும், அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்றும், தொடர்ந்து அந்தப் பேருந்துகளில் பயணித்தவர்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறதாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Rajmohan informs about 21 Tamils who have returned from Nepal