தென்கொரிய நாடகம் பார்த்ததால் சிறுவர்களுக்கு தூக்கு தண்டனை.!
death penalty to two childrens for watching korean series
வடகொரியாவில் தென்கொரிய நாடகம் பார்த்ததற்காக இரண்டு சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுதும் பிரபலமாக அறியப்படும் K-Drama series என்ற கொரிய நாடகங்களைப் பார்ப்பது மற்றும் விநியோகிப்பது போன்றவற்றிற்கு வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட கெரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சேர்ந்து, ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த அக்டோபர் மாதம் தென் கொரிய மற்றும் சில அமெரிக்க திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அந்த சிறுவர்களை பொதுவிடத்தில் வைத்து உள்ளூர்வாசிகள் முன்னிலையில் தூக்கு தண்டனையை அளித்துள்ளனர். இந்தச்சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், இது குறித்த தகவல்கள் கடந்த வாரம் தான் வெளியாகி உள்ளன.
English Summary
death penalty to two childrens for watching korean series