பாகிஸ்தான் : காதல் திருமணம் செய்து கொண்ட மகளை நீதிமன்றத்தில் சுட்டுக்கொன்ற தந்தை.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளை நீதிமன்றத்தில் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

பாகிஸ்தான் கராச்சியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியான வஜிரிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தந்தையின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி அதே பகுதியில் வசித்து வந்த மருத்துவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்த இளம் பெண் சுதந்திரமான திருமணத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்துவதற்காக தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய கராச்சி நகர நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த இளம் பெண்ணின் தந்தை, எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்ட மகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 

மேலும் இந்த சம்பவத்தில் ஹெட் கான்ஸ்டபிள் இம்ரான் ஜமான்(40) காயமடைந்துள்ளார். இதையடுத்து இளம் பெண்ணின் தந்தையை மடக்கிப் பிடித்த போலீசார் அவரிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கவுரவம் என்ற பெயரில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் கொல்லப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Daughter shot dead by father in court in Pakistan


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal