சிங்கப்பூரில் இந்திய வாலிபருக்கு சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூர் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுரேந்திரன் சுகுமாரன். இவர் அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், சுரேந்திரன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தனது முன்னாள் காதலிக்கு முகமது என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன் தனது முன்னாள் காதலியின் வருங்கால கணவரின் முகவரியை கேட்டு அலைந்து கண்டு பிடித்தார். 

அதன் பின்னர் முகமது வீட்டுக்கு சென்ற சுரேந்திரன் முகமதுவை வீட்டின் உள்ளே வைத்துப் பூட்டிய பின்னர் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடினார். இருப்பினும் இந்த விபத்தில் வீட்டில் உள்ள யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக சுரேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று இறுதி விசாரணை நடைபெற்றதில் சுரேந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுரேந்திரனை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி அவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court Six months imprisonment order to indian young man in singapoore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->