பெண்களை அனுமதியில்லாமல் டார்லிங் என அழைப்பது குற்றம் தான் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அந்தமானில் உள்ள வெபி கிராமத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலரை ஜனக் ராம் என்ற நபர் “டார்லிங் அபராதம் விதிக்க வந்தாயா?” என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு கடந்தாண்டு விசாரணைக்கு வந்த நிலையில், ஜனக் ராம் மீது குற்றம் சுமத்தப்பட்டு மூன்று மாத சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், சம்பவத்தின் போது ஜனக் ராம் போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் காவல்துறையினரால் வழங்கப்பட்ட சாட்சியங்கள் போதுமானதாக உள்ளது என்று தெரிவித்து முந்தைய நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

மேலும், மதுபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பெண்களை டார்லிங் என்று அழைக்க முடியாது. இத்தகைய செயல் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தலில் சேரும் என்று தெரிவித்து நீதிபதி தண்டனையை உறுதிப்படுத்தினார். இருப்பினும், 3 மாத சிறைத் தண்டனையை 1 மாதமாக குறைத்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court order dont call darling without permission


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->