மோதல்! டிரம்ப் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைக்கும் எலான் மஸ்க்...! புது கட்சி தொடங்குவாரா? - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா தொடர்பாக ''எலான் மஸ்க்'' கடும் எதிர்வினை ஆற்றி வருகிறார்.மேலும், அரசு செயல்திறன் துறை தலைவர் பதவியை துறந்த 'எலான் மஸ்க்', டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வரைமுறையின்றி முன்வைத்துள்ளார்.

இதில்,"தான் உதவியிராவிட்டால் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார்" என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அமெரிக்காவின் 80% நடுத்தர மக்களின் பிரிதிநிதியாக புதிய கட்சியை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதா?" எனத்  தனது எக்ஸ் தளத்தில் 'எலான் மஸ்க்' வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

இதன்மூலம் 'எலான் மஸ்க்' புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளாரா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

இந்நிலையில், எப்ஸ்ட்டீன் கோப்புகள் எனப்படும், தொழிலதிபர்கள், பெரும்புள்ளிகள் தொடர்புடைய சிறுமிகள் பாலியல் துஷ்ப்ரயோக நெட்வொர்க் தொடர்பான வழக்கில் டிரம்ப்பும் சம்மந்தப்பட்டுள்ளார் என்று 'எலான் மஸ்க்' பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

மேலும் டிரம்ப் மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் வழக்குகள் உள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு அமெரிக்க மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Confrontation Elon Musk will make series of accusations against Trump Will he start new party


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->