வர்த்தக ஒப்பந்தத்தை மீறிய சீனா: டொனால்ட் டிரம்ப் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், அமெரிக்கா பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளதோடு, சீன பொருட்களுக்கு அதிர வரி விதித்தார்.

இதற்கு சீனாவும் பதிலடி கொடுத்து வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் தொடங்கியது. ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை  நடந்தது. அதனை தொடர்ந்து புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன. மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தமும் ஏற்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிக்கை ஒன்று வெளியிட்டு கூறியுள்ளதாவது: இரண்டு வாரங்களுக்கு முன்பு, சீனா பெரிய பொருளாதார ஆபத்தில் இருந்தது என்றும், தான் நிர்ணயித்த அதிக வரி விதிப்பால், உலகின் முதலிடத்தில் உள்ள அமெரிக்க சந்தையில் சீனா வர்த்தகம் செய்வது கிட்டத்தட்ட சாத்தியம் அற்றதாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார். இதனால், சீனாவுக்கு பேரழிவை ஏற்படுத்தியதோடு, அங்கு பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன என்றும், உள்நாட்டில் அமைதியின்மை இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், என்ன நடக்கிறது என்று தான் பார்த்ததாகவும், அது எங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கும் அது பிடிக்கவில்லை எனவும், மிகவும் மோசமான சூழ்நிலையாக இருக்கும் என்று தான் நினைத்ததாகவும்,  அதில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஒப்பந்தம் காரணமாக சீனா நிம்மதி அடைந்தது என்றும்,  வழக்கம்போல் வணிகத்திற்கு திரும்பியதாகவும், அங்கு அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர் என்றும், அது தான் நல்ல செய்தி என்று தெரித்துள்ளார்.

ஆனால், மோசமான செய்தி என்னவென்றால், அது சிலருக்கு ஆச்சர்யமாக இருக்காது என்றும்,  எங்களுடனான ஒப்பந்தத்தை முற்றிலுமாக சீனா மீறியுள்ளதாகவும், மிகவும் நல்லவர்களாக இருந்ததற்கு இப்படியா? என்று அறிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.ஆனால் சீனா எந்த வகையில்,ஒப்பந்தத்தை மீறியது என்பது பற்றி டிரம்ப் தெளிவாக விளக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China violates trade agreement Donald Trump condemns


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->