சீனாவில் நிலவும் மின் பற்றாக்குறையால் விளம்பர பலகைகளில் விளக்குகளை அணைக்க உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சீனாவில் நிலவும் அதிக வெப்பநிலையால் நீர் தேக்கங்கள் வறண்டு போயுள்ளன. இதனால் நீர்மின் நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தடைப்பட்டு மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும் சீனாவில் மின்பற்றாக்குறையை சமாளிக்க நாடு முழுவதும் மின் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அரசு விடுத்துள்ளது.

இந்நிலையில் சீனாவின் தென்மேற்கு நகரமான செங்க்டுவில் மின் பற்றாக்குறை நிலவுவதால், விளம்பர பலகைகளில் உள்ள விளக்குகளை அணைப்பதற்கும், சுரங்க பாதையில் உள்ள விளக்குகளில் ஒளிரும் திறனை குறைத்து ஒளிர விட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து செங்க்டு நகரத்தில் உள்ள டொயோட்டா கார் ஆலையில் உற்பத்தியை நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

மேலும் சிஸ்வான் நகரில் நீர்மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் பெரும்பாலும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுவதால், மின்சாரம் வினியோகம் நிறுத்தப்பட்டால் சீன பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China ordered to switch off lights in bill board due to power shortage


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->