பாகிஸ்தானுக்கு ஆஃபர் கொடுத்த சீனா...! J- 35A போர் விமானம்...!
China offers Pakistan J 35A fighter jet
இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டையைத் தொடர்ந்து, சீனா தனது 5 -ம் தலைமுறை J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு பாகிஸ்தான், ஆகஸ்ட் மாதம் முதல் 30 J-35A ஜெட் விமானங்களைப் பெறவுள்ளது.இதில் பாகிஸ்தானுக்கு சீனா தனது போர் விமானங்களை 50% தள்ளுபடியை வழங்கியுள்ளதுடன், எளிதாக கட்டணம் செலுத்தும் ஆப்ஷன்களையும் வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மீண்டும் பாகிஸ்தான் இந்தியாமீது தாக்குதல் நடத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.மேலும், எதிரி நாடுகள் இரண்டும் கைகோர்த்து வச்சு செய்யபோகிறதா? என்ற பீதியும் மக்களிடையே கிளம்பியுள்ளது.
இதற்கு முன்னதாக மோதலில் இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களுக்கு எதிராக சீனாவின் J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
English Summary
China offers Pakistan J 35A fighter jet