600 கிமீ வேகம்.. விமானத்தை முந்தும் அசுரன்.. சீனாவின் அசத்தல் இரயில்.! - Seithipunal
Seithipunal


சீனா மணிக்கு 600 கிமீ வேகத்தில் பயணம் செய்ய்யக்கூடிய காந்த இரயிலை, கடந்த 2019 ஆம் வருடம் உருவாக்கியது. கடந்த வருடத்தின் ஜூன் மாதம் கிழக்கு சீனாவில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தின் துறைமுக நகரான கிங்டோவில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. 

இந்நிலையில், அதிவேக காந்த இரயிலை பொதுப்போக்குவரத்து பயன்பாட்டிற்காக சீனா நேற்று அறிமுகம் செய்துள்ளது. கிங்டொ நகரில் இருந்து சீனாவின் காந்த இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

தண்டவாளங்களை தொடாமலேயே காந்த சக்தியின் உதவியால் மிதந்தபடி பயணம் செய்யும் இரயிலில், 2 முதல் 10 பெட்டிகள் வரை இணைத்து பயணம் செய்யலாம். இந்த இரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டியில் 100 க்கும் மேற்பட்டோர் வரை பயணம் செய்யலாம். 

இதன் மூலமாக, இரயிலில் 10 பெட்டிகள் இணைக்கப்படும் பட்சத்தில், நெரிசல் மிகுந்த அல்லது பண்டிகை காலங்களில் சுமார் 1000 பேர் பயணம் செய்யலாம். இந்த இரயில் மணிக்கு 600 கிமீ வேகத்தில் பயணம் செய்வதால், உலகின் முதல் அதிவேக இரயில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 

இதனால் 4 மணிநேரம் விமான வழியில் பயணம் செய்யும் நேரம் 2 மணிநேரமாக குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. விமான பயணத்தை விட இது விரைந்த பயணம் ஆகும்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸின் வீரியத்தை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China Magnet Train Service started to Public


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->