#சீனா || நிலக்கரி சுரங்கத்தில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து.! 10 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வடமேற்கு பகுதியில் பையின் சிட்டியில், மலையையொட்டி தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், பாறைகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில்  ஈடுபட்டனர்.

பாறைகள் சரிந்து விழுந்ததில் பணியில் இருந்த 10 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சுரங்கத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் அனைவரும் ஷாங்க்சி கோக்கிங் கோல் மின்பாவோ தனியார் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டவர்கள்.

இதையடுத்து இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China landslide mining accident 10 died


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->